
Premanand S
மனிதன் வாழும் வாழ்க்கை !
ஆறறிவு உள்ள இயந்திரம்,
தன்னைப் பற்றி கவலைப்படாமல்
மற்றவர்களுக்காகவே வாழும் ஓர்
நடமாடும் உயிரினம்!
பணம் என்னும் போதை பொருளின்
முதல் அடிமை !
தன்னுடைய சந்தோஷத்திற்காக
மற்றவர்களின் வாழ்க்கையை
வேட்டையாடும் மிருகம் !
தனக்கு ஆறறிவு என்னும் பரம்பொருள்
இருந்தும் , பயனில்லாத கோமாளி வாழ்கை !
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்னும்
ஸ்வாசத்தை மறந்து, தலைக்கனம்,
பொறாமை, ஜாதியை பார்த்து பழகும்
நிலையற்ற (கோமா ) நிலையில் வாழும் ஓர் ஜடம் !
அன்பு என்னும் இதயத்தை தொலைத்து
கோபம், வெறுப்பு என்னும் இதயமில்லா
மிருகமாக வாழும் வாழ்க்கையே மனிதன் !