
Premanand S
மனிதனின் வாழ்க்கை !
சந்தோஷத்திருக்கும் போலியான மகிழ்ச்சிக்கும்
நடுவே நடக்கும் போராட்டம்தான்
மனிதனோட வாழ்க்கை !
மனதிற்கு தெரியும் மகிழ்ச்சி என்பது
பணத்தால் வருவதில்லை, அன்பால் என்று !
நீ அன்பால் இருந்தால் , இந்த உலகம்
உன்னை கோமாளியாக தான் பார்க்கும்!
அதனால் இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்றால்,
போலி என்ற முகமூடியை அணியத்தான் வேண்டும் !
அன்பை புதைத்து, தனிமையை பிரித்து,
வெறுப்பை ஏற்றி, நஞ்சை வளர்த்து,
வஞ்சம் திரித்து வாழும் வாழ்க்கையே
மனிதனுடைய வாழ்கை !